Sunday, October 27, 2013

உதிர்ந்த நட்(பூ)

பேராசையால் ஓர் அழகான நட்பை இழந்துவிட்டேன்..
இழந்த  நட்பை  மீட்ப்பேனோ!
மீளமுடியாமல் தோற்பேனோ!

நேரம் காலம் தெரியாமல் கதைக்க..
கண்கள் பூத்திருக்க...
நினைத்தேன்..
இப்படி மௌனித்திருக்க எதிர்பார்க்கவில்லை ..
பார்க்காமல் பூக்காமல் உதிர்ந்தன இருவிழிகள்..
இழந்த  நட்பை  மீட்ப்பேனோ!
மீளமுடியாமல் தோற்பேனோ!

ஏக்கத்தின் தாக்கம் மிகைத்திட
மிஞ்சியது விரக்தி..
நேரம் கடந்து புரிந்தது
தொலைத்தது தோழமை என்று..
மெதுவாக மலர்ந்திருக்க வேண்டிய நமது நட்பு 
அரும்பும்போதே  உதிர்ந்ததேன்..
புதுநட்பு ஆரம்பிக்கும் முன்னமே  முடிவுற்றதேன்..
இழந்த  நட்பை  மீட்ப்பேனோ!
மீளமுடியாமல் தோற்பேனோ!

இனித் தொடங்கத்  துணிவில்லை..
மனம் நோக விரும்பவில்லை
உணர்வுகளை இனி நம்பவில்லை
வழி மேல் விழி வைக்க எண்ணமில்லை..
இழந்த நட்பை மீட்கவில்லை..
எனை மீட்க தோற்கவில்லை!

No comments:

Post a Comment