Sunday, January 8, 2012

நெல்லி...

நான் நட்டுவைத்த நெல்லிக்கன்று
என் உயரத்துக்கும் மேலே சென்றது இன்று..
அது எனை பார்த்து சிரித்தது, முதல் நெல்லிக்கனியை ஈன்று..
அந்நெல்லிக்கனியை பறித்துச் சுவைத்தேன்..
கனியின் சுவையை விட
'நான் வைத்த நெல்லிமரக் கனி',
என்ற பெருமிதச்சுவையே இனித்தது..